நந்தி தவம் செய்த "நந்தியால்' - திருத்தலம்
>> சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம்- ஸ்ரீசைலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்றும் நந்திதேவர் அவதரித்த தலமென்றும், இந்த ஷேத்திரம் ஆந்திரா கர்நூல் மாவட்டத்தின் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் உள்ளதென சென்ற பதிவில் பார்த்தோம் .
>> இம்மலைக்கு கீழே "நந்தியால்' என்ற ஊரில் நந்தி தவம் செய்த இடத்தில் பழமையான அற்புதமான சிவாலயம் உள்ளது ..
>> இவ்வூருக்குள் நுழைந்தவுடன் முகப்பில் உள்ள மிகப்பெரிய நந்திதேவரின் எழில் மிகு காட்சியை காண கண்கோடி வேண்டும்..
>> ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக உள்ளது ..தீர்த்தக்குலம் மிக அழகாக பராமரிக்கப் படுகிறது.
நந்திதேவர் அவதரித்த கதை :
>> சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.
>> சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,""தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,''என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.
>> நந்தி தவம் செய்த "நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.
>> பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் இவ்வாலயம் உள்ளது.
>> ஸ்ரீ சைலத்தில் இருந்து நந்தியால் 160 கிலோ மீட்டர் ..தோர்நால் வழியாக ஆத்மகூர் வந்து நந்தியால் வரவேண்டும்..நந்தியாலில் இருந்து அஹோபிலம் 64 கிலோமீட்டர் ..கண்டு தரிசனம் செய்யுங்கள் ..அருமையான அனுபவங்களை பெறுவீர்கள் ..
No comments:
Post a Comment