Tuesday, 22 November 2016

கிரிவலம்

புனித தலங்களில் திருவண்ணாமலை்யிலும், திருப்பரங்குன்றத்தில், மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.

பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது. கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இளம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.

அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

கிரிவலம் பற்றி ஒரு கதை

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு.

ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டு பூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார்.

பூனையும் தன்னைக் காத்துக் கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றி வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டு பூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம்.

ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம். பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியது, குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் அவ்விரண்டும் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது. கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.

நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ள கூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம். மலையை ஒட்டி ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.

தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.

இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு. ஒரு சிவலிங்கத்தை
கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த
தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது. முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.

அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.

தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.

கிரிவல நோக்கம்
************************
* நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும்.

* நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

* பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை
உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும்,

* திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.

* சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்
***************************
*திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.*

இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

*இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.*

இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.

*மூன்றாவது  அமைந்துள்ள லிங்கம் எமலிங்கமாகும்.*

இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது எமதர்மனால்
நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

*நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்.*

இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள்
நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

*ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.*

இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

*ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம்.*

இந்த லிங்கம் வடமேற்கு திசையை
நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும்
நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

*ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.*

வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

*கடைசி லிங்கம் எசானிய லிங்கம்.*

வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

*திருவண்ணாமலை கிரிவலத்தில் பலவித தரிசனங்கள்*
****************************
* எமலிங்கத்தின் வாசலில் நின்று
அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு.ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப் பெறவைக்கும்.

* அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும். கிரிவலப்பாதையில்
செங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்..இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு
தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.

* குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து
திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.தொடர்ந்து வந்து, பூதநாராயணப் பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம்
நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும். இங்கிருந்தும்,
திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்று பெயர்.

*கிரிவல பலன்கள்*
************************
ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.

* ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்

* திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.

* செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.

* புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.

* வியாழன் - ஞானம் கூடும்.

* வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.

* சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.

*கிரிவலம் வரும் முறை*

*************************
* நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம்
வர வேண்டும். ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.

* பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும். மிதியடி அணிந்து கொண்டு வலம்
வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது. கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.

* பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.

* காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது. போதைப் பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்கக் கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது. தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்து, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது.

* எப்படி நடக்கப் போகிறோம் என்று
மலைப்புடன் வலம் கூரக்கூடாது. யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும்
சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும். கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வரவேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமான பலன் கிடைக்கும்.

* இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ,
நடைப்பந்தயமோ அல்ல எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.

* மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். கையில்
ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு. திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.

* பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது.
அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள்,
அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு கோடி லிங்கங்கள் இருப்பதால் மலையை நோக்கி நின்று கொண்டு சிறுநீர்
கழிக்கக்கூடாது.

* வாகனத்தால் வலம் வரக்கூடாது.
திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது. கிரிவலத்தின் போது அவரவர் பித்ருக்களை
வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை
அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம். மலையை ஒட்டிய
பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல வேண்டும்.

Thursday, 22 September 2016

சிவபெருமானின் அரிய வடிவங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள

🌞 பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌞நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

🌞ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

🌞தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

🌞கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

🌞அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

🌞 கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

🌞அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌞செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

🌞காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

🌞மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

🌞பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

🌞திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

🌞ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

🌞பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

🌞தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

🌞 ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

🌞தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

🌞காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

🌞மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

    🌸🌿 *திருச்சிற்றம்பலம்.*🌸🌿

Sunday, 18 September 2016

சிவன் சொத்து குல. நாசம் – இதன் அர்த்தம் என்ன?

சிவனின் சொத்தாக, அவர் அருளிய முல வித்தாக கருதப்படுவது சித்த மார்க்கம். அத்தகைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் சித்தர்கள். ஒருவர் சித்தராக வேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது.

நினைப்பவர் எல்லாம் சித்தர் ஆகிவிட முடியாது.

நரை, திரை, முப்பு என்று நம்மிடம் கேட்டுக்கொண்டிருக்காமல் பால்ய, இளமை, முதுமை என மரணத்தை நோக்கி தானாக நகர்ந்து கொண்டிருக்கும் காயத்தை (உடலை) தன்வயப்படுத்தி நிறுத்த வேண்டும். சதா காலமும் சுக்கிலத்தை, அதாவது நாதவிந்தை கட்ட வேண்டும்.

ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலத்தை அறுக்க வேண்டும். அனைத்து பந்தங்கள் மீதும் பாசம் வைத்திருக்கும் தன்மையை நீக்க வேண்டும். அத்தகையவனே சித்தி அடைந்தவன்.

இதில் மிகவும் முக்கியமானது, யோக பயிற்சியின் முலம் குண்டலினியை எழச் செய்வதாகும். அதாவது, ஆண் ஆனவன், தனது விந்தை பூமியை நோக்கி விழச் செய்யாமல், அதை பிரம்மச்சரியத்தால் கட்டி, உச்சந்தலையை நோக்கி உயர்த்தி, உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும்.

அதன்பின்னரே அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.
இவ்வாறு விந்துவை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்துவிடும்.

இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்...

Wednesday, 27 July 2016

மகாலிங்கமலையின்மகிமை

சதுரகிர மகாலிங்கமலை என்றால அனைவருக்கும் தெரியும்  அம்மலைக்குள் இன்னும் எவ்வளவோ ரகசியங்கள் உள்ளன பலவித வழிகள் உள்ளன பலவித இடங்கள் உள்ளன அவற்றில் ஒன்று
பெருமாள் மொட்டை இது அனைவரும் கண்டிராத மலை. இது ஏறத்தாழ கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கு மேல் பறந்து விரிந்துள்ளது. இங்கு பெருமாள் காட்சியளிக்கிறார். கிட்டத்தட்ட சதுரகிரி சந்தன மகாலிங்கம் மற்றும் தவசி பாறையிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் மேல்நோக்கி அடர்ந்த மலைப்பயணம் செய்ய நாம் இந்த பெருமாள் மொட்டை மலையை வந்தடையலாம். வழியில் நாம் பெரிய மகாலிங்கம், தவசிபாறை, வெள்ளை விநாயகர், வன பத்ர காளியம்மன், எம வனம், யான கசை, ஆகாயத்தில் நவகிரக பீடம் ஆகியவற்றை கடந்து நாம் பெருமாள் மொட்டையை அடையலாம். இனி இந்த பெருமாள் மலையின் சிறப்புகளையும், பயணத்தின் போது நான் கண்ட சில சதுரகிரி மூலிகைகளையும் இங்கே காண்போம்.

ஜோதி விருட்சகம்

சித்தர்களின் ஆபூர்வ மூலிகைகளின் ஒன்றான ஜோதி விருட்சம் (உரோம விருட்சகம்) வனம் இங்கு உள்ளது தான். ஒன்றான ஜோதி விருட்சக மரத்தின் படத்தையும் இங்கே பகிர்ந்துள்ளேன். இதனுடைய ஆபூர்வ குணங்கள் இதன் அடியில் இருக்கும் பாறைகளின் நிறமும் கூட பசுமையாக காட்சி தருகிறது. இதன் அருகில் நாம் அமர்ந்தால் பசி, தாகம், மன உலைச்சல் போன்ற சிந்தனைகள் வராது. இந்த அபூர்வ மரத்தில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூத்து கனியாகின்றது. இந்த கனிகளை பறவைகளும், விலங்குகளும் விரும்பி சாப்பிட . இதை அறிந்த காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள், அப்பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்,
இந்த கனிகளை போன்று எந்த கனிகளை பறவைகள், மிருகங்கள், விரும்பி சாப்பிடுகிறதோ அதை அறிந்த பின்புதான் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.இது போன்ற பல கனிகளை உன்பதால் இவர்களுக்கு வயது முதிர்ந்தாலும் உடல் தோற்றம் இளமையாகவே காணப்பட்டு உடல் சுருக்கம் இல்லாமலும், தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும், கண்பார்வை 100 வயது ஆனாலும் கண்ணாடி இல்லாமலே பார்வை குறையாமல் இருக்கும் இதற்க்கு காரணம் இயற்க்கையே!!!

அபூர்வ ஆஞ்சநேயர்

நங்கள் சனிகிழமை காலை பெருமாள் பிரார்த்தனைக்குத் தேவையான ஏற்பாடுகளைசெய்து கொண்டிருந்தோம்.அப்பொழுது தண்ணிர் எடுக்க சென்ற போது தான் வேரிலேயே இயற்கையாக உருவான அந்த அஞ்சநேயரைக் கண்டு மெய்சிலிர்த்தோம். என்னே ! அற்புதம் இறைவனது படைப்பில், நாங்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களாக கருதினோம். அத்தகைய அதிசியத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். நீங்களும் அருள் பெருக. இதில் ஆஞ்சநேயர் தண்டயும் ஏந்தியும் அவரது வாலானது இரண்டு சுருள்களாக சுருண்டும் காட்சியளிக்கிறார்.
பெருமாள் மொட்டையில் தீபம் ஏற்றுதல்
ஒவ்வொரு சனிக்கிழமையும் புரட்டாசி மாதத்தில் பெருமாள் மொட்டை மலையில் ஏற்றிய தீபத்தைப் வணங்கிய பிறகு தான் சனிக்கிழமை விரதத்தையே முடிப்பர் என்பது வரலாறு. அத்தகைய சிறப்பு மிக்க தீபம் ஏற்றுவதைத் தான் நாம் காண்கிறோம்.

யானை கசை

யானை கசை என்பது சிறிய குளம் போன்று தோற்றமளிக்கும். உண்மையில் யானைகள் இங்கு தான் உறவு கொள்ளுமாம். இங்குள்ள நீரை பருகினால் மகப்பேறு கிட்டும் என்று பெரியவர்கள் சொல்ல யானை கசை பெயர்க்காரணம் காரணம் புரிந்தது.

எமவனம்

இது மிகவும் அடர்த்தியான வனத்தைக் கொண்டதனால் இவ்வாறு அழைக்கபடுகிறது. ஏறத்தாழ சதுரகிரி மலைக்கும் பெருமாள் மலைக்கும் இடையே பன்னிரண்டு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது.ஒருமுறை வழி தவறினால் கூட கட்டுக்குள்ளேயே சுற்றிகொண்டிருப்போம்.
கர்ப்ப (கற்ப) சஞ்சீவி மரம்
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அடைய செய்யும் இந்த கற்ப சஞ்சீவி மூலிகை.நான் மலைப்பயணம் தொடங்கும் முன்பு குறிப்பிட்டதைப் போல மூலிகை பற்றிய தேடலில் கொண்ட எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்வதாக அமைந்தது இந்த பயணம்.

பெரிய மகாலிங்கம்

சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சுயம்புவாக காட்சியளிக்கிறார் பெரிய மகாலிங்கம். அவரின் பின்பகுதியில் சடைகள் போல இயற்கையாகவே மரத்தின் வேர்கள் பின் பின்னைந்துள்ளதை நாம் கண்கூடாக காண முடியும்.
இது அனைவருக்கும் காணக்கிடைக்காத தவம்.சமீப காலமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பாதை மிகவும் சீரழிந்துள்ளது.

சித்தர்கள் அருள்

பெரிய மகாலிங்கம் ,சதுரகிரி இடையே பயணத்தில் நான் ஒரு ஆரஞ்சு மரத்தையும் அதில் ஒற்றைப் அரஞ்சு பழம் கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.மேலும் வேரில் சுயம்புவாக காட்சியளித்த ஆஞ்ச நேயர்,எனக்கு கிடைத்த பெரிய மகாலிங்கம் வடிவில் கிடைத்த சிறிய மகாலிங்கம், ஏறுசிங்கி, இறங்கு சிங்கி, கற்ப சஞ்சீவி, வெள்ளை நாவல் முதலிய மூலிகைகளையும், சித்தர்களின் அருளிசியுடன் காணலாம்.

Saturday, 2 July 2016

பேரூர் பட்டீஸ்வரர்

பழைய படம் சுமார் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருத்தலம் திருப்பேரூர் (இன்றைய  பேரூர்).கரிகால் சோழன் , நாயக்க மன்னர்கள் ,சேர ,சோழ ,பாண்டிய மன்னர்கள் ,மைசூர் மன்னர்கள் ,விஜயநகர அரசர்கள் வணங்கிய தலம் இது.பிரம்மா,திருமால், அதி உக்ரகாளி ,நந்தி,சுந்தரர் ஆகியோருக்காக நடராஜர் சிதம்பரத்தில் ஆடியது போல ஆனந்த நடனம் புரிந்ததும் , அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தண்டபாணி உள்ளதும், காமதேனு முக்தியடைந்ததும் ,எப்போதும் நாராயணனை வணங்கிய  நாரதர் வழிபட்ட சிவன் இருப்பதும் ,பட்டிபுரி, ஆதிபுரி , ஞானபுரி,மேலைசிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கோயில் இது.

                                  சோழ அரசனால் அமைக்கப்பட்ட கருவறையில் இறைவன் லிங்கவடிவில் பட்டீஸ்வரன் என்ற நாமத்துடன் தரிசனம் தருகின்றார் . பச்சைநாயகி அம்மன் தன் சன்னதியில் பத்ம பீடத்தில் நின்ற நிலையில் வலது கையில் நீலோத்பவ மலருடன் ,இடக்கை டோல ஹஸ்தமாக அருள் வழங்கும் கண்களுடன் காட்சி அளிக்கின்றார்.
                                       தல விருட்சம் பன்னீர்மரம் (சித்தேச மரம் ) மூலவருக்கு பின்னாலேயே அமைந்துள்ளது .காமதேனுவின் கொம்பினால் குத்தி உருவாக்கப்பட்ட தீர்த்தம் சிருங்கக்கிணறு மூலவருக்கு இடதுபுறம் முன்னால் அமைந்துள்ளது .கொடிமரத்திற்கு முன்ன்னல் நின்று வெள்ளை கோபுரம் வழியே பார்த்தால் பட்டீஸ்வரர் கருவறை விமானம் தெரிகிறது.இது போன்ற அமைப்பு மதுரை மற்றும் சில தளங்களிலே யே உள்ளதாகும் .
                                   திருவிழாக்கள்    பங்குனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் நடத்தப்படும் பிரம்மமோற்சவம் தவிர திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக கொண்டாட  படுகின்றது . இங்கு மட்டுமே மிகசிறப்பாக ஆணி மாதம் கிருத்திகை தொடங்கி 9 நாட்கள் நாற்று நாடும் விழா நடைபெறும் . விழாவின் 10 வது நாளில் சிவபெருமான் நாற்று நாடும் காட்சியோடு விழா நிறைவுபெறும் .

                                                             பூஜைகள்   காலை 5.30 மணி முதல்  1 மணி வரையும் மீண்டும்  4 மணி முதல் இரவு  9  மணி வரையும் நடை திறக்கபட்டிருக்கும் .கோபூஜை ,கஜபூஜை தவிர தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது .கிருத்திகை தோறும்  கடந்த 34 ஆண்டுகளாக 108விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது .தற்போது பிரதிவாரம் வெள்ளிகிழமைகளில் திருவிளக்கு வழிபாடு நடை பெறுகின்றது .