Friday, 30 October 2015

சிவன், சக்தி, விநாயகர், சுப்ரமணியம் யார்

கோயிலில் சிவன், சக்தி, விநாயகர், சுப்ரமணியம் வைத்திருப்பதற்கு விளக்கம் என்ன?
   
நமது ஜீவனை குருவின் அருளாலும் பயிற்சியாலும் சிவனாக்க வேண்டும். குருவின் தீட்சையால் நெற்றிக்கண் திறந்து ஜோதி தரிசனம் கிடைக்கும். சக்தி என்ற மனம் அறிவு என்ற சிவனோடு சேரும் போது மாயசக்தி மறைந்து, கிரியா சக்தியாக மாறி, ஜீவசக்தி கூடி ஞான ஒளியாக நம்மில் பிரகாசிக்கிறது. உண்மையான பக்தர்களுக்கு இது கிடைக்கும்.
  
விநாயகர் என்பது உடல் கூறைக் குறிக்கும். முருகன் என்றால் மும்மலத்தை வென்றவன். மும்மலத்தை வென்றபின் தான் சுப்ரமணியமாக இருப்பார். சுப்ரமணியம் என்றால் குருவின் தயவால் சற்குருவை அறிந்து உணர்ந்து தனக்குள்ளே கோயில் அமைத்து அவரை வழிபடுவதாகும். சற்குருதான் பிரம்மம். சுத்த பிரம்மத்தை உணர்ந்தவரே சுப்ரமணியம்.

சிரசு கர்ப்ப கிரகம்
கழுத்து அர்த்த மண்டபம்
மார்பு மகா மண்டபம்
நாடி யாக சாலை
பாதம் கோபுரம்
வாய் கோபுரம்
உள்நாக்கு கொடிமரம்
பஞ்ச இந்திரியங்கள் தீபங்கள்
இதயம் கர்ப்ப கிரகம்
உயிர் மகாலிங்கம்
 

சிவனடி சேர்ந்திடு...

எவனடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம்
அழிவில்லை சிவனடி சேர்ந்தார்க்கு

ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எவனோ ஒருவனுக்கு அடிமையாகியே தீர வேண்டும் என்பது மனித குலத்திற்கான விதி! – அது
சிவனுக்காயிருந்தால் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எந்த முதலாளியும் தன் தொழிலாளியை தனக்கு நிகரான வளமையோடு வாழ வைத்துப்பார்க்க எண்ணியதில்லை. 

ஆனால் தன்னிலமை மண்ணுயிர்கள் சாரத்தரும்சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்!

எந்தத் தலைவனும் தன் தொண்டனுக்கு தான் வகிக்கும் அதே பதவியை கொடுக்க எண்ணியதாக வரலாறு இல்லை.

ஆனால் சித்தமலம் அறுவித்து சிவமாக்கும் தன்னிகரில்லாத்தலைவன் சிவபெருமான்!

எந்தத்தாயும் இதுவரை பசித்து அழும் முன்னரே தன் சிசுவிற்கு பாலூட்டியதில்லை .

ஆனால் பால் நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிந்தருள்
செய்யும் தாயிற்சிறந்த தயாவான தத்துவன் எம்சிவபெருமான்!

தோழமையின் பொருட்டு தூது சென்றவனும். பிட்டிற்காய் மண் சுமந்து பிரம்படி பட்டவனும். ஏன் இவ்வுலக உயிர்கள் இன்புற வாழ வேண்டி கொடிய
நஞ்சுதனைத் தானுண்டு இன்று வரை
அதை தன் கண்டத்தில் சுமப்பவனுமான
பெருங்கருணையாüன் சிவபெருமானே!

- அந்தச்சிவனுக்கு அடிமையாயிருத்தல் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை

சிவனடியார் ஆகிப்பார்…

சாதி. குலம் எனும் சுழிப்பட்டுத்திரியும் அவல நிலை நீங்கி. சிவக்கோலமே சிவமெனக்கருதி அடியார்க்கு
அடியாராய் சிவ குடும்பங்களாய் அன்புசெய்து வாழும் அடியார் திருக்கூட்டத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க ஒருமுறை சிவனடியார்
ஆகிப்பார்…

வெற்றித்திருமகள் எப்போதும் உன்தோள் பற்றித்திரிவாள் உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு
கண்டு, ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எத்தனை பெரிய கண்டம் தோன்றிடினும்
உனை வந்து அண்டாமல் காக்கும் நீ அணிந்திருக்கும் கண்டமணி உருத்திராக்கம், ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

21 தலைமுறையை நரகத்தில் வீழாது
காக்கும் நீ படிக்கும் திருவாசகம் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

துன்பங்களைக்கண்டு நீ ஓடிய காலம் போய். துன்பங்கள் உன்னைக்கண்டு ஓடும் நீ ஓதும் திருவைந்தெழுத்தைக் கேட்டு நமசிவாய! சிவாயநம! ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

• அறியாமை விலகும் 

• ஆனந்தம் பெருகும்

• இருள் அகலும்
• ஈசனருள் பெருகும்
• உண்மை விளங்கும்
• ஊழ்வினை துலங்கும்
• எப்போதும் மலர்ந்திருப்பாய்
• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்
• ஐம்பூதங்களும் உன்வசமாகும்
• ஒருவன் என்னும் ஒருவன் வருவான்
•ஓங்காரத்துட்பொருளை தானே விரிப்பான்
• ஒளடதமாய் உன் பிறவி நோய்த்தீர்ப்பான்
சவமாக வேண்டிய நீ சிவமாவாய் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எவனடி சேர்ந்தார்க்கும்... அழிவுண்டாம் அழிவில்லை!
சிவனடி சேர்ந்தார்க்கு ! 

"திருச்சிற்றம்பலம்"

Thursday, 29 October 2015

சிவனடியார்‬ என்பவர் யார்?


கவலையில்லாத மனம்! நோயில்லாத உடல்! இரண்டையும் தரவல்லவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் சிவபெருமான் மட்டுமே

இன்புற வாழ்வோம்! இறைவனடி சேர்வோம்! வாழ்தலே வழிபாடு!

நீ விரும்புவதை விட உயர்வானதை இறைவன் கொடுப்பான்!

நாடுவது சிவத்தை எனில் நன்மை, தீமை பற்றி கலங்காதே!

அறியப்படாத ஒன்றே சிவம்
அறிந்ததை எல்லாம் அறிவிப்பதே சிவம்–சிவபுரம்

1. சிவனுக்கு யான் அடியார் என்று எண்ணி எண்ணி மகிழ்பவன் சிவனடியார்.

2. தனக்கு உகந்ததை சிவனுக்கு படைத்து மகிழ்பவன் சிவனடியார்.
3. சிவனுக்கு உகந்ததை தானும் உகந்து மகிழ்பவன் சிவனடியார்.

4. அண்டசராசரத்தை படைத்து அதில் இன்புற வாழ, என்னையும் படைத்தான் என்பதை இன்புறும் போதெல்லாம் மறவாது நினைப்பவன் சிவனடியார்.

5. சிவபெருமான் மட்டுமே தனக்கு வேண்டியதை கொடுக்க வல்லவன் என்பதை உணர்ந்து வாழ்பவன் சிவனடியார்.

6. சிவனிடம் தான் பெற்றதை பிறருக்கு கொடுத்து மகிழ்பவன் சிவனடியார்.

7. பிறருக்கு தான் கொடுத்ததை, சிவன் கொடுத்ததே என்று எண்ணி அவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என எதிர்பாராது இருப்பவன் சிவனடியார்.

8. துன்பங்களும், நோய்களும் தன்னை சூழ்ந்த வினைகளை போக்க வந்தவை என்று உணர்ந்து அனுபவித்து வினைகளை கழற்ற வல்லவன் சிவனடியார்.

9. தனக்கு துன்பம் தரும் காரணிகள் யாவும், பிறரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தன்னாலே வரவழைக்கப்பட்டது என்று உணர்பவன் சிவனடியார்.

10. தான் இன்புற தடைஏதும் விதிக்காதவன் சிவன் என நம்புபவன் சிவனடியார்.

11. இன்புறலும், துன்புறலும் தன் ஆன்மாவை சிவனடிக்கு இழுத்து சொல்லும் இரட்டை மாடுகள் என உணர்ந்து ஒவ்வொரு அனுபவத்திலும் தன் வினை கழன்று போவதை அறிந்து நொடிக்கு நொடி அதிகரிக்கும் ஆனந்தத்தொடு வாழ்பவன் சிவனடியார்.

12. தானே சிவமாக சிவானந்த பேரின்பத்தில் மூழ்கி இருந்தாலும் சிவனொருவன் மட்டுமே எல்லாம் வல்லவன் என்பதை மறவாது இருப்பவன் சிவனடியார்.

13. தன்னால் ஆக வேண்டியது என சிவனார் பணித்த தன் பிரபஞ்ச கடன் மட்டுமே தன்னாலாகும் என உணர்ந்து நடப்பவன் சிவனடியார்.

14. சிவனை நாட, தடை ஏதும் சொல்லாதிருப்பவன் சிவனடியார்.

15. சிவனால் ஆகும் பிரபஞ்ச செயல்களை பார்த்து, ரசித்து மகிழ்பவன் சிவனடியார்.

16. தனக்கென ஒரு பிரபஞ்ச கடனை தந்து, தன் பணியில் என்னையும் இணைத்துக் கொண்டானே அந்த சிவன் என எண்ணி அளித்த பிறவியை வியந்து போற்றி வாழ்பவன் சிவனடியார்

ஓம் நமசிவாய

நவக்கிரகங்கள் வணங்கிய தலங்கள்!

நவக்கிரகங்களால் மனிதர்கள் இன்ப,
துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
அந்த நவக்கிரகங்களும் துன்பம்
அனுபவித்து, பாவ விமோசனம் பெற்ற
தலங்கள் எவை என்று தெரியுமா?

சூரியன்: சூரியனார் கோயில்,
பாபநாசம் பாபநாசர் கோயில்
(திருநெல்வேலி மாவட்டம்)

சந்திரன்: திருவாரூர் தியாகராஜர்
கோயில், திங்களூர் கைலாசநாதர்
கோயில், சேரன்மகாதேவி
அம்மையப்பர் கோயில் (நெல்லை
மாவட்டம்)

செவ்வாய்: வைத்தீஸ்வரன் கோவில்,
பழநி கோவில் 

புதன்: மதுரை, திருவெண்காடு

குரு: திருச்செந்தூர், ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சுக்கிரன்: கஞ்சனூர்
சுக்கிரபுரீஸ்வரர் கோயில்
(சூரியனார்கோவில் அருகில்)

சனீஸ்வரன்: திருநள்ளாறு
தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்,
திருக்கடையூர் அபிராமி கோயில்,
மதுரை அழகர்கோவில்,
ஸ்ரீவைகுண்டம் காசி விஸ்வநாதர்
கோயில்

ராகு: திருநாகேஸ்வரம்

கேது: கீழப்பெரும்பள்ளம் நாகநாதர்
கோயில் (நாகப்பட்டினம் மாவட்டம்).

சிவாய நம ஓம்

எட்டு காலங்கள்

விடியலுக்கு முன் 3 மணி  6 மணி வரை - பிரம்ம முகூர்த்தம்.

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை - தேவர்கள் காலம்.

முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை - ரிஷிகளின் காலம்.

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை - பிதுர்க்களின் காலம்.

பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை - சந்தியா காலம்.

முன் இரவு 6 மணி முதல் 9 வரை - 
பூத காலம்.

நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை- பிரேத காலம்.

பின் இரவு 12 மணி முதல் 3 மணி வரை - ராக்ஷச காலம்

பிரம்ம முகூர்த்த காலத்தில் 
திதி, நக்ஷத்ரம் சரியில்லாவிட்டாலும் சுபகாரியங்கள் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால் 
வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில் 
நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை, திதி, நக்ஷத்ரம், வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில் 
திதியினை பிரதானமாகவும், நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், 
கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும், ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது, நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ, முடிக்கவோ கூடாது.

ஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்!

ராமபிரான் புண்ணிய தீர்த்ததில் நீராடி,
சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில்
இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம்.

இங்கு தான்
22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும்:

மகாலக்ஷ்மி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்

சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் -
சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததிஇல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

சக்கர தீர்த்தம் - தீராதி நோயும் தீரும்.

சேது மாதவ தீர்த்தம் - செல்வம்
கொழிக்கும்.

நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற
சொர்க்கத்தை அடையலாம்.

நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

கந்தமான தீர்த்த - தரித்திரம் நீங்கும்
பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம்
நீங்கும்; பில்லி சூனியப் பிரச்சனைகள் விலகும்.

சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.

சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளில் கோபத்தில்இருந்து விடுபடலாம்.

சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்

கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் -
பிறவிப்பயனை அடையலாம்.

இறுதியாக,
கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப்
பயன்படுத்திய தீர்த்தம் இது.

சிவனாரின் அருளையும்
ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப்
பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே
கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச்செல்கிறார்கள் பக்தர்கள்.

சிவாய நம ஓம்

கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

ஆலயம் என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ள
வேண்டும். மனிதனின் தலை, கழுத்து, 
மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படியாக கோயிலின் கர்ப்பக்கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன. கருவறை விமானம் தலை, அர்த்தமண்டபம் கழுத்து, மகாமண்டபம் மார்பு, இங்கு தான் இதயதுடிப்பு இருப்பது போல நடராஜர் நடனமாடும் சந்நிதி அமைக்கப்படும். தொப்புள் கொடிமரம். ராஜகோபுரம் பாதங்கள். இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோயிலில் கருவறையின் மேலே விமானம் உள்ளது. 

"மானம்'என்றால்"அளவு',"வி' என்றால் 
"கடந்தது'. "அளவு கடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம். 

கோபுரம் என்பதை "கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். "கோ'என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்' . இறைவனின் இருப்பிடமே கோபுரம். 

அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக்கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'
என்று சொல்லும் வழக்கம் வந்தது.

திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர்திருக்கோயிலில் உள்ள சிலஅற்புதமான ரகசியங்கள் ! ! ! 


திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்ச பூதத்தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்திகொடுக்கும் தலம் இதுதான்.இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகைசிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர்கோலம் கொண்ட தலம். கார்த்திகைதீபத்தின் மூலத் தலம். ஆதாரத்தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப்புகழ் பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள்கொண்ட  ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பாலரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச்சிலைகள், கல்யாண  மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம்என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத்தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இருபெரிய குளங்கள் உள்ளன.கொடிக்கம்பம் அருகே செந்தூரவிநாயகர் பிரம்மாண்டமாக காட்சிதருகிறார்.  பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்மலிங்கமும் உள்ளன. காலபைரவர்சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில்மூன்று இடங்களில் வணங்கப்பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக  முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டுஅருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம்  இது ஒன்றுதான்.  ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவ மூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடிஉயரம்), வீரவல்லாள கோபுரம், கிளிகோபுரம்  (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடிஉயரம்); மேற்கே பேய் கோபுரம் (160அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்கவருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800மீட்டர்). கிரிவலப் பாதையின்  தூரம் 14 கிலோமீட்டர்.  இப்பாதையில்  20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்டலிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.  அடிக்கு 1,008லிங்கம் அமைந்துள்ளது  என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு  வகைதரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ் நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.  அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில்தான் அமைத்த சிவலிங்கம்கரையாமல்  இருக்க மார்போடு சேர்த்து  அணைத்தார் அன்னை காமாட்சி.  இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவ பெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடது புறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராககாட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத்  துளி மலை மீது பட்டு அவள்  வயிற்றில்பட்டது.  அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு  ஒருயாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த  பலன்கிட்டும். மகாதீப தரிசனம்  கண்டால், அவர்களின்  21 தலைமுறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள  இடுக்குப்பிள்ளையார் சந்நிதிக்கு  மூன்றுவாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.  இதன் வழியேபடுத்து நெளிந்து,  வளைந்துதான் வெளிவர  வேண்டும். இதனால் குழந்தைப்பேறு  கிட்டும்; கருப்பைக்கோளாறுகள் நீங்கும்.மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம்செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர்,சக்தி தேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலதுபுறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையைதரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி,தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சி முனிவர், சேஷாத்ரிசுவாமிகள், இசக்கி சாமியார், விசிறிசாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி,சைவ எல்லப்ப நாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர்மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையேமிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும்  ஏழரைசனி, அஷ்டமச்சனி போன்ற வற்றால் ஏற்படக்  கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணா மலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாகநடைபெறும். பஞ்சமூர்த்திகளும்தனித்தனி தேர்களில் உலாவருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.
பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறை முன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.இந்த ஒற்றை நெய் தீபத்தால் நந்தி முன் ஐந்து பெரிய அகல்விளக்கு ஏற்றுவார்கள். அதன் பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல்விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும்.
மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன்வெளியே எடுத்துவந்து கொடிக்கம்பம்  அருகேயுள்ள தீபக்கொப்பரையில்  ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சிகொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலை மீது உடனே மகாதீபம் ஏற்றி விடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக் கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜைசெய்து விட்டு விரதம் முடிப்பார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக்கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

தீபம்  ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர் தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்ட பின்தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்துகிலோ மீட்டர் தூரம் வரை தெரியும்.
திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான்  சமயச்சொற்பொழிவுகள் நடைபெறும்.இவ்வாலயம் முழுவதும் சுற்றிப்பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத்தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

நந்தியும், சிவபெருமானும்..

நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே.
நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. ஆக தர்மதேவதையே சிவ பெருமானின் வாகனமாக அமைந்துள்ளது.சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை).
தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.

அவ்வேண்டு கோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.

சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தியுள்ளதை நாம் காண முடியும்.
கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.தருமவிடை சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார்.

அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது.
இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. 

இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கில் இருக்கிறது. ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க
அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில்தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம்.

திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும்சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே.சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்.

சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார்.
நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

`நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு.
மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது.
மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு.

ருத் என்பது துக்கம்.
ரன் என்பது ஓட்டுகிறவன்.
துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன்.
தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே!

சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.

நந்தி வழிபாட்டுக்கான கிழமைப்பலன்:

ஞாயிறு- சுப மங்களத்தைத் தரும்.

திங்கள்- சோம சூத்ர பிரதட்சிணநாள். நல்ல சிந்தனைகள் தரும். பல அசுவமேத யாகங்கள் செய்த பலன்கிட்டும்.

செவ்வாய்- வறுமை விலகும்.

புதன்- புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை வலுப்பெறும்.

வியாழன்- குருவருளோடு, இறை அருள் கிடைக்க பித்ருக்கள் உதவுவார். அனைத்து ஆபத்தும் விலகிப் போகும்.

வெள்ளி- எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் வலுயிழப்பார்கள். 

சனி - மகா பிரதோஷ நாள். பதவி உயர்வு வரும். அஷ்டலக்ஷ்மிகளின் பரிபூரண ஆசி கிடைக்கும்