Monday, 30 November 2015

சிவமயமே எங்கும் சிவமயமே!

கருவறையில் இருக்கும் மகாலிங்கம் போலவும், உடம்புக்கு உயிர் போலவும் விளங்குவது சிவநாமம். வேதங்களின் மத்தியில் ஜீவரத்தினமாகவும் திகழ்கிறது.பாவத்தை கணப்பொழுதில் காணாமல் போகச் செய்யும் பொருள் ஒன்று இருக்கிறது. அதைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். இரண்டு எழுத்துக்களால் ஆன சிவ என்னும் நாமமே அது. சிவநாமத்தை சொல்ல தகுதி என்ன வேண்டும் என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த யாரும் அதைச் சொல்லலாம். நாக்கு இருந்தால் மட்டும் போதும்.சிவ என்று சொல்லாதவரைக் கண்டால், சிவநாம மகிமையை உணராத இவனுக்கு நாக்கு கொடுத்து பயனில்லை என்று கடவுள் திரும்பி வாங்கிக் கொண்டு விடுவான்.கோயிலுக்குச் சென்று சிவ பெருமானை நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். ஹர ஹர மகாதேவா என்று இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.ஹர ஹர மகாதேவா என்ற நாம ஒலி, இந்த உலகம் முழுதும் நிறையச் செய்ய வேண்டும். இந்த நிலையை அடைந்து விட்டால், உலகிலுள்ள தீய
சக்திகள் யாவும் ஒழிந்து விடும்.நமக்கு கஷ்டம் ஏதும் வந்து விட்டால், உதவி செய்யக் கூடிய யாரையாவது தேடி அலைகிறோம். சிவாய நம என்று சிந்தித்துஇருந்தால் அபாயம் ஏதுமில்லை என பெரியவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

தயாளமும், கருணையும் நிறைந்தவர் சிவன். அறுபத்து மூன்று நாயன்மார்களில்எத்தனையோ பாமர வாழ்வு நடத்திய எளியவர்களும்சிவனருளால் நற்கதி அடைந்துஇருக்கிறார்கள்.அனைவரும் எளிதில் அணுகக் கூடிய சிவபெருமானை நினைத்து, மனம் உருகி கரைந்து கண்ணீர் பெருக்கினால், பிறவி சக்கரத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும்.எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமாக இருப்பவர் சிவனே. உலகிற்கெல்லாம் தாயும்தந்தையுமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை வணங்குகிறேன் என்று மகாகவி காளிதாசர்ரகுவம்சத்தின் முதல் மங்கள ஸ்லோகத்தில் பாடியிருக்கிறார். ஒரே சர்க்கரையால் பல இனிப்புகள் செய்வது போல, ஒன்றாக இருக்கும் சிவமேஉலகிலுள்ள அத்தனைபொருளுமாக ஆகியிருக்கிறது. மனம் பாவச் செயலில்ஈடுபடாமல் இருக்கவும்,முன்வினைப் பாவம் அடியோடு நீங்கவும் எப்போதும் சிவனை தியானிக்க வேண்டும். ஈஸ்வர தியானமே வாழ்வின் நம் அன்றாடப் பணியாக இருக்க வேண்டும்.எருக்கு, தும்பை, ஊமத்தை இந்த மூன்று பூக்களும்சிவனுக்குப் பிரியமானவை. உலகில் எத்தனையோ மலர்கள் இருந்தாலும், மணமோ, விலையோ இல்லாத இந்த மலர்களை விரும்புவது, அவரின் எளிமையைக் காட்டுகிறது.அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையேநற்றுணையாவது நமச்சிவாயவே என்றெல்லாம் அருளாளர்கள் சிவனை திருமுறைகளில் துதி செய்திருக்கிறார்கள். நாமும் அம்மையப்பரான சிவனின்திருவடிகளை எப்போதும் சிந்தித்து நல்வாழ்வு பெறுவோம்.

Thursday, 26 November 2015

குலதெய்வம் என்பது

குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வ...ழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.

பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும். குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை. 

ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது. 

குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.

குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.

அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்.

Wednesday, 25 November 2015

உருத்திராட்சம்

உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தரிக்க வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.
இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். 'ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன்.எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகி உருத்திராட்சங்களாயின' என்றார்.
உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தரித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.
இரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.
இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.
இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரீஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.
அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் அருள் கிடைக்கும் . அதிதேவதை அஷ்டவசு.
இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரி காரம் ஏற்படும்.
பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன்அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால்போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தா¢த்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிப்பு பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.
பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிபோரும் , புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'
என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

பஞ்சபூத சிவதலங்கள்

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது. இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு. இந்த சிவசக்திகளை சமஸ்கிருத மொழியில் பிருதிவி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(வளி), ஆகாசம்(வான்) என அழைக்கின்றார்கள். இவற்றின் வல்லமையை கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்று தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்று வழங்குகிறார்கள். இறைவனான சிவபெருமான் பஞ்ச பூதங்களாக அருள்புரியும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாகும்.
1) பிருத்விதலம் –
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் அல்லியங்கோதை திருக்கோயில் பிருத்விதலமாகும். சுந்தர மூர்த்தி நாயனார் நட்பு கொண்டவர், அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்றவர் தியாகராஜர். பிருத்வி என்றால் மண்ணாகும். இங்குள்ள இறைவனை பிருத்விலிங்கம் என்றும், புற்றுமண்ணால் ஆன லிங்கரூபாக இறைவன் இருக்கிறார் என்பதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.
2) அப்புதலம் –
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அப்புதலமாகும். இத்திருக்கோயில் திருவானைக்காவல் என்றும் அழைக்கப்பெறுகிறது. அப்பு என்றால் நீராகும். உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்தார், இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் நீர்வடிவான அப்புலிங்கமாக தோன்றி அருள் செய்த தலம் இது.
3) தேயுதலம் –
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் தேயுதலமாகும். தேயு என்றால் நெருப்பாகும். பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று போர் நிகழந்த போது, அடிமுடி காணமுடியாத நெருப்பாக உயர்ந்து தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.
4) வாயுதலம் –
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம். இந்த உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி), காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்று அழைப்படுகிறார். இறைவன் வாயுலிங்கமாக காட்சி தரும் தலம் இது.
5) ஆகாசதலம் –
தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகாசதலமாகும். நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த தலம். சித் என்றால் அறிவு, அம்பரம் என்று வெளி,. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஆகாயமாக அருள் தரும் தலம் இது.

Tuesday, 24 November 2015

தோஷங்களை போக்கும் “பிரதோஷம்”

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டதும் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

திருமால், பிரம்மன், தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அன்னை பார்வதி சிவபெருமானின் கழுத்தில் தன் கைகளால் தடவிய போது கொடிய விஷம் அமுதாக மாறியது. சிவபெருமான் “திருநீல கண்டர்’ ஆனார்.

“சனி பிரதோஷம்”

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

“பிரதோஷ காலம்”

பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.

“பிரதோஷ தரிசனம்”

வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.

“பிரதோஷ வகைகள்”

பிரதோஷமானது 
நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், 
மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், 
பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கு கீழ்க்கண்ட பொருட்களை கொடுத்தால் விளையும் பலன்கள் வருமாறு:

1. பால் கொடுத்தால் நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் தந்தால் பல வளமும் உண்டாகும்.

3. தேன் கொடுத்தால் இனிமையான சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் கொடுத்தால் விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் தந்தால் செல்வச்செழிப்புஏற்படும்.

6. நெய் கொடுத்தால் முக்திப்பேறு கிட்டும்.

7. இளநீர் தந்தால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.

8. சர்க்கரை கொடுத்தால் எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் தந்தால் சுகவாழ்வு கிட்டும்.

10. சந்தனம் கொடுத்தால் சிறப்பான சக்திகள் பெறலாம்.

11.மலர்கள் தந்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.

Saturday, 14 November 2015

சிவதலங்கள்

274 சிவதலங்கள்

ஜோதிலிங்க சிவதலங்கள்

சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)

பஞ்சபூத சிவதலங்கள்

மண் (பிருத்திவித்தலம்)  திருவாரூர்நீர் (அப்புத்தலம்) திருவானைக்காதீ
(தேயுத்தலம்) திருவண்ணாமலைவளி (வாயுத்தலம்)- திருக்காளத்திவான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

பஞ்சதாண்டவ சிவதலங்கள்
சிதம்பரம்-ஆனந்த தாண்டவம். திருவாரூர்-அசபா தாண்டவம். மதுரை-ஞானசுந்தர தாண்டவம். அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம். திருமுருகன்பூண்டி-பிரமதாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்
சிதம்பரம்-பொன் மன்றம் (கனக சபை).
திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்க சிவத்தலங்கள்
திருவாரூர்-வீதிவிடங்கர் அசபா நடனம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்|திருநள்ளாறு- நகரவிடங்கர் உன்மத்த நடனம்.

திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் வீசி நடனம்.

திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் குக்குட நடனம்.

திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் பிருங்க நடனம்.

திருவாய்மூர்- நீல விடங்கர் கமல நடனம்.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் கம்சபாத நடனம்

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
திருவாரூர்-பிறக்க முக்தி தருவது சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது

அட்டவீரட்டானக் கோயில்
திருக்கண்டியூர் – பிரம்மன் சிரத்தைச் சிவன்

கொய்ததுதிருக்கோவலூர் – அந்தகாசுரனைச்

சங்கரித்தது திருவதிகை – திரிபுரம்

எரித்தது திருப்பறியலூர் – தக்கன்

சிரம் கொய்தது வழுவூர் – யானையை உரித்தது

திருவிற்குடி – சலந்தாசுரனைச் சங்கரித்தது

திருக்குறுக்கை – காமனை எரித்தது.

திருக்கடவூர் – எமனை உதைத்தது.

தமிழகத்தின் நவ கைலாயங்கள்
பாபநாசம் சேரன் மகாதேவி கோடக நல்லூர் குன்னத்தூர் (திருநெல்வேலி) முறப்பநாடு ஸ்ரீவைகுண்டம் திருவைகுண்டம் தென்திருப்பேரைராசபதி சேர்ந்தபூமங்கலம்

திருச்சிற்றம்பலம்...

சிவம்

சிவ தத்துவம்

சிவ சின்னங்கள்
திருநீறு உருத்திராக்கம் திருவைந்தெழுத்து காவியுடையானைத் தோல்மான் பாம்பு பிறை நிலா சூலாயுதம்

சிவ தாண்டவங்கள்
ஆனந்த தாண்டவம்
சந்தியா தாண்டவம்
உமா தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்
கஜ சம்ஹாத் தாண்டவம்
கெளரி தாண்டவம்
காளிகா தாண்டவம்

சிவ முகங்கள்
சத்யோ ஜாதம் வாமதேவம் அகோரம் தற்புருடம் ஈசானம்
சிவ ரூபங்கள்
சிவ பெயர்கள்
சிவ அடியார்கள்
சிவ தலங்கள்
சிவ தரிசன பலன்கள்

சிவனது உருவத்திருமேனி
சந்திரசேகரர் உமாமகேஸ்வரர் ரிஷபாரூடர் நடராஜர் கல்யாணசுந்தரர் பிட்சாடனர் காமதகனார்காலசம் ஹாரமூர்த்தி திரிபுராந்தகர் சலந்தரர் கஜாசுர சம்ஹாரர் தக்க்ஷயக்ஞவதர் ஹரியர்த்தர் அர்த்தநாரீசுவரர் கிராதகர்கங்காளர் சண்டேச அநுக்கிரஹர் நீலகணடர் சக்ரப்ரதர் விக்னப்ரசாதர் சோமாஸ்கந்தர் ஏகபாதர்சுகாசனர் தட்சிணாமூர்த்தி இலிங்கோத்பவர் ரிஷபாந்திகர் அகோரவீரபத்ரர் அகோராஸ்ரமூர்த்தி சக்ரதானஸ்வரூபர் சிவலிங்கம் முகலிங்க மூர்த்திசர்வஸம் ஹாரர் ஏகபாத திரிமூர்த்தி திரிபாத மூர்த்திஜ்வரஹரேஸ்வரர் ஊர்த்துவதாண்டவர் வராக் ஸம்காரி கூர்மஸம் ஹாரிமச்சஸம் ஹாரிசரபேசர் பைரவர் சார்த்துலஹரிலகுளீசர் சதாசிவர் உமேசர் புஜங்கலளிதர் புஜங்கத்ராசர் கங்காதரர் கங்காவிசர் ஜனர்யக்ஞேஸ்வரர் உக்ரர் ஆபதோத்தாரணார் ஷேத்ரபாலர் கஜாந்திகர் அச்வாரூடர் கௌரீவரப்ரதர் கௌரீலீலா சமன்விதர் கருடாந்திகர் பிரம்ம சிரச்சேதர் ரக்தபிக்க்ஷா ப்ரதானர் சிஷ்யபாலர் ஹரிவிரிஞ்சதாரணர் சந்தியா நிருத்தர்